வங்கதேசத்தின் பிரதமரை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். அதன்படி கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஷேக் ஹசீனா, ஒரு வாக்குத்திருடர் என்று முழக்கமிட்டனர். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு படை முற்றுகையிட்டிருக்கிறது. இதனால், […]
