வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் மதத்தை கொண்டு வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதோடு 66 வீடுகள் சேதப்படுத்தபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத ரீதியாக […]
