தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 16 முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 16 முதல் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் நேற்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் LKG, UKG மூடப்படும் என்று தகவல் வெளியானது. […]
