கன்னட திரையுலகில் பழமையான நடிகர்களில் ஒருவர் லோகிதஷ்வா (80). துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இவர் பெங்களூரு குமாரசாமி லே அவுட் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார். அத்துடன் இவர் தன் ஏராளமான திரைப்படங்களில் முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் உட்பட பல பேருடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனிடையில் வயது முதிர்வு காரணமாக லோகிதஷ்வாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
