நாகையில் 12 மணி நேரமாக கடலில் தத்தளித்த மீனவரை இலங்கை கடற்படையினர் “லைப் ஜாக்கெட்” கொடுத்து காப்பாற்றியது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பகுதிக்கு 7 பேரை அழைத்துக்கொண்டு மீன்பிடிக்க இரவு நேரத்தில் சென்றுள்ளார். இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்னப்பன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடன் […]
