லைபீரியாவின் தலைநகரில் நடைபெற்ற கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் மர்ம கும்பல் நடத்திய கத்தி தாக்குதலையடுத்து அங்கிருந்த ஏராளமானோர் அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி உட்பட 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லைபீரியாவின் தலைநகரான மான்ரோவியாவிலிருக்கும் கால்பந்து மைதானத்தில் வைத்து கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்த கூட்டத்தின் மீது மர்ம கும்பல் ஒன்று அதிபயங்கரமாக கத்தி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை கண்டு […]
