லெபனான் நாட்டில் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நபர் இறுதி சடங்கின் போது மூச்சு விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டில் உள்ள ஹெர்மேல் என்ற நகரில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இறந்த நபரின் உடலை பெண் ஒருவர் அழுதபடி தொட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சவப்பெட்டியில் இருந்த அந்த நபர் திடீரென அசைந்தும், மூச்சு விட்டபடியும் இருந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் முதலுதவிக்காக ஆம்புலன்ஸையும் அழைத்துள்ளனர். […]
