பெய்ரூட் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். அதே சமயத்தில் அந்த வெடி விபத்தால் 3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து […]
