கோவா மாநில முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ தனது சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனை குறித்து அவர் பேசியதாவது, “மம்தா பானர்ஜியால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது அதிகாரத்திற்கும் சவால் விட முடியும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு […]
