திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெத்திக்குப்பத்தில் ஒரு திருமண மண்டபம் அமைத்துள்ளது. இந்த திருமண மண்டபம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவருடைய மகள் ஜெயபிரியாவுக்கு சொந்தமானது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரண்டாவது மாடியில் இருக்கின்ற உணவு கூடத்திற்கு லிப்ட் மூலமாக கேட்டரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்து […]
