இந்திய சந்தையில் பிரபலமான லாவா நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை தொடங்கியதில் இருந்து பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலமான லாவா நிறுவனம் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை ரூபாய் 10,000 ஆகும். […]
