ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவனஊழல் குறித்த டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சிங்கப்பூர் போக வேண்டும் எனவும் அதற்காக சி.பி.ஐ வசமுள்ள தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் […]
