லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]
