லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் போயம்பாளையத்திலிருந்து குன்னத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டை முந்திச் சென்ற கண்டெய்னர் லாரி அருணாச்சலம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் மீது லாரியின் […]
