லாரி மோதிய விபத்தில் மூதாட்டி காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் தம்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான தம்பையா டீசல் நிரப்பிவிட்டு லாரியை இயக்கியுள்ளார். அப்போது நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் கன்னிமரியாள் என்ற மூதாட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தம்பையாவின் லாரி எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மேல் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
