இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]
