அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கொண்டுவந்து அதனை விற்பனை செய்வதாக சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது தினேஷை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து […]
