லாரி டிரைவரிடம் செல்போன் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி பகுதியில் கந்தவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கந்தவேல் கைப்பையுடன் மடத்தூர் சாலையில் உள்ள லாரி செட் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி சக்தி நகர் பகுதியில் வசிக்கும் வேல்முருகன், சுதர்சன் மற்றும் மற்றொருவர் வந்துள்ளனர். அவர்கள் திடீரென கந்தவேல் கைப்பையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி […]
