லாரி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கொடியூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சரவணன் தனது கூட்டாளிகளான வினோத், தீனதயாளன், ரஞ்சித்குமார், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குமாரை இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமாரை அருகில் […]
