செம்மண் கடத்திய 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 டிப்பர் லாரிகளிலும் செம்மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
