சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள வாகன காப்பகத்தில் எதிரே சந்தோஷ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்தார். அதன்பிறகு காவல்துறையினர் சந்தோஷ் என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சந்தோஷ் வெள்ளை காகிதத்தில் கேரளா லாட்டரி டிக்கெட் என்று கூறி பொய்யான எண்களை எழுதி பொதுமக்களிடம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
