சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவாடானையை அடுத்துள்ள பாசிபட்டினத்தை சேர்ந்த அன்வர் சதாத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை […]
