மேற்குவங்க தொழிலாளிக்கு திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் 80 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளதால் திருட்டு பயம் காரணமாக போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மருதம்குழி என்ற பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். பிரதீபா மண்டல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் . அதனால் அவர் மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு வந்து தனியாக வேலை செய்து வருகிறார் . பிரதீபா மண்டல் கடந்த […]
