தமிழகத்தில் திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர், காவல் நிலையத்தில் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆட்சியில் லாக்கப் மரணங்கள் தொடர்கதை ஆகி வருவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று […]
