நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய லம்போகினி காரை ஓட்டிச்சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சமயத்தில் நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்தபடி […]
