பாகிஸ்தான் அரசு மிரட்டலுக்கு பணிந்து பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து ரிஸ்வி பெயரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” எனப்படும் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி மீது தீவிரவாத தாக்குதல், நூற்றுக்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே பஞ்சாப் மாகாண அரசு ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி-ஐ பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இதையடுத்து கடந்த […]
