தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
