கொரோனா வைரஸால் லத்தின் அமெரிக்கா கரீபியன் பிரதேசம் முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிரதேசத்தில் 208 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐநாவின் பொருளாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30.5 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும், 12.5 சதவீத மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்கப் […]
