லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். ஏர் இந்தியா விமானம் கடந்த செவ்வாய் கிழமை அன்று 210 பயணிகளுடன் லண்டனில் இருந்து கேரளா மாநிலத்தின் கொச்சிக்கு புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணித்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் 2 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பயணித்து வந்துள்ளனர். இதனால் மருத்துவர்களின் உதவியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு […]
