நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை […]
