பந்தலூர் அருகே ரூ 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் பழனி சாமி என்பவர் குறுவட்ட நில அளவையராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எருமாடு அருகில் மூனநாடு ஈரானி பகுதியில் வசித்து வந்த விவசாயி வாசுதேவன் என்பவர் தன்னுடைய சொந்த நிலத்தை அளவீடு செய்ய பழனிசாமிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதையடுத்து பழனிசாமி நிலத்தை […]
