உத்தரபிரதேசத்தில் கடந்த 5 வருடங்களாக ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் தடுக்க ரோமியோஎதிர்ப்புப்படை உருவாக்கப்பட்டது. இப்படையைச் சேர்ந்தவர்கள் பொதுஇடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகியுள்ளார். புதிய அரசு பொறுப்பு ஏற்ற 100 நாட் களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான செயல் திட்டத்தை அரசு வகுத்துள்ளது. […]
