ரோபோடிக் உதவியுடன் ஒரேநேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு தாயையும், குழந்தையையும் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா். சென்னையை சோ்ந்த மருத்துவா் திவ்யதா்ஷினி(27) கா்ப்பமாக இருந்த போது இடது சிறுநீரகத்தில் பெரியகட்டி இருந்தது. இதனால் இருஉயிா்களையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் திவ்யதா்ஷினி சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவரைப் பரிசோதித்த சிறுநீரகவியல், மகப்பேறியல் சிறப்பு நிபுணா் மீரா, சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் ராகவன் போன்றோர் தலைமையிலான […]
