கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது திருநல்லூரை […]
