தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இதையடுத்து இவர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொண்டு இருக்கிறார். இப்போது ஆந்திர சுற்றுலாத் துறை மந்திரியாக இருக்கும் ரோஜா, பதவியேற்றதும் நடிப்புக்கு முழுக்குபோட்டு ஒதுங்கினார். தற்போது ரோஜா தன் மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம்செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தன் மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. […]
