மியான்மரியில் உள் நாட்டு போரின்போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அகதிகளாக மாறினர். மியான்மரிலிருந்து வெளியேறி ரோகிங்கியாக்கள் அண்டைநாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வட கிழக்கு மாநில எல்லைகள் வழியே இந்தியாவுக்குள் நுழைந்து போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரிபுரா மாநிலம் அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக இராணுவ […]
