பிரிட்டிஷ் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அல்மோராவில் 1857 ஆம் ஆண்டு ரொனால்டு ராஸ் பிறந்தார். தந்தை ராணுவ அதிகாரி. கல்வி கற்பதற்காக 8 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பள்ளி, கல்லூரிக் கல்வியை அங்கேயே முடித்தார். சிறு வயதில் கவிதை, இலக்கியம், இசை, கணிதம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையோ தன் மகன் இந்தியாவில் மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். இவர் தந்தையின் விருப்பப்படி லண்டனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவப் […]
