ராணுவ வீரர்களை தாக்கியதால் அமெரிக்கா ஈரானின் ராணுவ தளத்தை முற்றிலுமாக அழித்து பதிலடி கொடுத்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது சமீப காலத்தில் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதை காரணமாக கொண்டு எதிராளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு நேற்று சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் படை தளங்களின் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் அப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. […]
