கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நடத்தப்பட்ட திருமணத்தால் தொற்று ஏற்பட்டு ஒரு கிராமமே முடக்கப்பட்டிருக்கிறது. ரைச்சூர் மாவட்டம் தலை மெரினா கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற திருமணத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த கிராமத்தில் உள்ள பலருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரொன பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி […]
