இலங்கையில் இனி ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை […]
