தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதும் அவ்வப்போது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு திண்டிவனம் பகுதியில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் […]
