இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. […]
