தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வயதானவர்களின் கைரேகைகள் சரியாக பதிவதில்லை என்பதால் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கைரேகை பதிவை புதுப்பிக்குமாறு ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு […]
