தரமற்ற அரிசி வாழங்கியதால் ரேஷன் அரிசிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கண்ணாத்தாள் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கண்ணாத்தாள், விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்ற முறையிலும், பூச்சி, வண்டு ஆகியவை அதிக அளவில் கிடந்ததாக கூறப்படுகிறது. […]
