ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் மொபட்டில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூகனூர் பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் […]
