ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் மணியாச்சி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காரில் சட்டவிரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உடையார் மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியில் வசிக்கும் […]
