ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் கடந்த மாதம் 22 – ஆம் தேதி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் […]
