சரக்கு வேனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் காவல்துறையினருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி […]
