சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பண்ணப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பால் வண்டி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர்அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பூசாரிப்பட்டி பகுதியில் வசிக்கும் முரளி மற்றும் குபேந்திரன் என்பதும், […]
