கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சோதனை துல்லியமாக இல்லை எனவும், இந்த கருவியின் தரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை எனவும் தகவல் வெளியானது. முதலில் ராஜஸ்தான் அரசு, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இதனை […]
